ஆஸியில் செய்த தரமான சம்பவம்..ஜெய்ஸ்வாலுக்கு அடித்த ஜாக்பாட் | India | Cricket
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இடம்பெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 391 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடரில் கூடுதல் ஓபனராக (opener) ஜெய்ஸ்வால் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஜெய்ஸ்வால் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெய்ஸ்வால் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடாத நிலையில், விரைவில் அவர் அறிமுக வீரராக களமிறங்கலாம் என கூறப்படுகிறது.
Next Story