"என்ன இப்படி மோதிக்குறாங்க?" - அனல் பறந்த போட்டி
என்ன இப்படி மோதிக்குறாங்க? - அனல் பறந்த போட்டி
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், தொடக்கம் முதலே போட்டியில் அனல் பறந்தது. ஒருகட்டத்தில் பாகிஸ்தான் பவுலர் ஷாகின் அப்ரிடி Shaheen Afridi மற்றும் தென் ஆப்பிரிக்க பேட்டர் மேத்யூ பீர்ட்ஸ்கி Matthew Breetzke களத்தில் ஆக்ரோஷமாக வசைபாடியதால் சில நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. இதுமட்டுமல்ல, தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, 82 ரன்களில் ரன்-அவுட் ஆனபோது பாகிஸ்தான் பீல்டர்கள் அவரது முன்பு வந்து ஆக்ரோஷமாக கத்தியதால் பவுமா ஒரு விநாடி அதிர்ச்சி அடைந்தார்.
Next Story