சாம்பியன் பட்டத்துடன் சென்னை வந்த குகேஷ் - ஆரவார வரவேற்பு "I m Waiting.." - விஜய் ஸ்டைலில் சேலஞ்
செஸ் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கனடாவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சேலஞ்சர் தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதேயான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரனை எதிர்கொள்கிறார். இந்த சூழலில் CANDIDATES சாம்பியன் பட்டத்துடன் சென்னை திரும்பிய குகேஷ்க்கு, அவர் படித்த தனியார் பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நள்ளிரவு 2 மணியளவில் மாணவ, மாணவிகள் திரண்டு வந்து குகேஷை ஆரவாரம் செய்து வரவேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த குகேஷ், தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர் தனக்கு நற்வாய்ப்பாக அமைந்ததாக குறிப்பிட்டார்.
Next Story