"இங்க நான் தான் கிங்".. King-கே பாடம் எடுத்த அஸ்வின்.. துவண்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. சொல்லி சொல்லி அடித்த 'லோக்கல் பாய்'

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி... ஆரவாரத்துடன் திரண்டிருந்தனர் ரசிகர்கள்.... மேக மூட்டமான சூழலில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பவுலிங் தேர்வு செய்தார்....

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி.... கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களுக்கும், கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஹசன் மஹ்மது ஓவரில் ஆட்டமிழந்தனர்.

தனது 30வது டெஸ்ட் சதத்தை அடித்து டான் பிராட்மேனை (don bradman) முந்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 6 ரன்களுக்கு ஹசன் மஹ்மதுவிடமே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

முக்கிய விக்கெட்டுகளை இந்தியா இழந்தபோது ஜெய்ஸ்வால்-பண்ட் இணை சற்றுநேரம் தாக்குப் பிடித்தது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் களம் கண்ட பண்ட், 39 ரன்களுக்கும் ஜெய்ஸ்வால் 56 ரன்களுக்கும் கேட்ச் ஆக, கே.எல்.ராகுல் 16 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

150 ரன்களைக் கடப்பதற்குள் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இக்கட்டான சூழலில் உள்ளூர் வீரரான அஸ்வினும் ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து மீட்பராக மாறினர். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா சரிவில் இருந்து மீண்டது.

பரிட்சயமான சென்னை மைதானத்தில் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில், LOCAL BOY ஆன அஸ்வின், உள்ளூர் ரசிகர்களுக்கு ட்ரீட் தந்தார்....

ஒருநாள் போட்டிபோல் ஆடிய அஸ்வின், 10 ஃபோர்கள், 2 சிக்சர்களுடன் 108 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இது அஸ்வினின் ஆறாவது சதம்....

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்துள்ளது. 7வது விக்கெட்டுக்கு அஸ்வின்-ஜடேஜா இணை 195 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளது.

அஸ்வின் 102 ரன்களுடனும் ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்., இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், அஸ்வினைப்போல் ஜடேஜாவும் சதம் அடிப்பார் என எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்....


Next Story

மேலும் செய்திகள்