சாம்பியன்ஸ் டிராபி - இங்கிலாந்தை பந்தாடிய ஆஸ்திரேலியா

x

சாம்பியன்ஸ் டிராபி - இங்கிலாந்தை பந்தாடிய ஆஸ்திரேலியா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில், இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. லாகூரில் B பிரிவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து வீரர் Ben Duckett அபாரமாக விளையாடி 165 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து 352 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, Travis Head, Steve Smith ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்பு பேட் செய்த Jos Inglis 120 ரன்களும், Alex Carry 69 ரன் களும் சேர்த்தனர். Matthew Short 63 ரன்களும், Maxwell 32 ரன்களும் எடுக்க, 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 356 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்