குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் - பும்ரா சாதனை

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் - பும்ரா சாதனை
x

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில், ஒரே ஓவரில் ஆஸ்திரேலிய வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் விக்கெட்டுகளை வீழ்த்தி, பும்ரா இந்த சாதனையை படைத்தார். முன்னதாக 50 டெஸ்ட்களில் கபில்தேவ் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்த நிலையில், 44 டெஸ்ட்களில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி, பும்ரா அந்த சாதனையை முறியடித்தார். தனது 200-வது விக்கெட்டாக டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்