பாக்ஸிங்-டே டெஸ்ட் - முதல் நாளில் ஆஸி. ரன் குவிப்பு
மெல்போர்னில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் அறிமுக தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் இணைந்து கவாஜாவும் நேர்த்தியாக ஆடினார். அரைசதம் அடித்து அசத்திய கோன்ஸ்டாஸ் 60 ரன்களிலும் கவாஜா 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லபுஷேனும் ஸ்மித்தும் அரைசதம் அடித்து அசத்தினர். 72 ரன்களில் லபுஷேன் கேட்ச் ஆக, ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா பவுலிங்கில் போல்டானார். மார்ஷ் 4 ரன்களும் கேரி 31 ரன்களும் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 68 ரன்களுடனும் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story