ஆஸி. ஓபன் - நான்காம் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் போட்டியில் செக் குடியரசு வீரர் தாமஸ் மச்சாக் (tomas machac) உடன் ஜோகோவிச் மோதினார். போட்டியில் அபாரமாக விளையாடிய ஜோகோவிச், 6க்கு 1, 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று நான்காம் சுற்றுக்குள் நுழைந்தார். நாளை நடைபெறும் நான்காம் சுற்றுப் போட்டியில் செக் குடியரசு வீரர் ஜிரி உடன் ஜோகோவிச் மோதவுள்ளார்.
Next Story