ஆஸ்திரேலிய ஓபன் - அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் - அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
x

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு செர்பிய வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன், ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை அல்கராஸ் கைப்பற்றிய நிலையில், அபாரமாக விளையாடிய ஜோகோவிச், அடுத்த 3 செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றினார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஆட்டத்தின் முடிவில், 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 3, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார். அரையிறுதி போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ் உடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்