ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா... திக்.. திக்.. 10 நிமிடம் - ஜெஃப் பெசோஸின் அடுத்த மைல்கல்
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் கேப்சூல் விண்கலம் 5வது முறையாக விண்வெளிக்கு சுற்றுலா சென்று வெற்றிகரமாக திரும்பியுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் சர்வ சாதாரணமாக செய்து நம்மை வியக்க வைத்து வருகின்றன. இதில், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் ஆரோக்கியமான போட்டியும் நிலவி வருகிறது. அந்த வகையில் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், 5வது முறையாக விண்வெளி சுற்றுலாவை வெற்றிகரமாக செய்துள்ளது. மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வான் கார்ன் ஏவுதளத்தில் இருந்து 6 சுற்றுலா பயணிகளுடன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட், காற்றை கிழித்துக்கொண்டு விண்ணில் பாய்ந்தது.
Next Story