கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் - அமுதா ஐஏஎஸ்... - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் தாக்கல் செய்த மனு,
நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசின் சிறப்பு விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ்-யின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், சிசிடிவி சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என, அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்றத்தில் அமுதா ஐஏஎஸ் அறிக்கை தருவதாக ஏற்கனவே அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதால், அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரர் வசம் கொடுக்க வேண்டும் என்றும், சிசிடிவி காட்சிகள் வழங்க வேண்டும் என்ற மனுவில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.