பொன்முடி பேச்சுக்கு எதிர்ப்பு -கள் குடித்து பெண்கள் போராட்டம்
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பொன்முடி, கள்ளை போதைப்பொருள் என கூறியதைக் கண்டித்து, விழுப்புரத்தில் பெண்கள் கள் குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்றத்தில் கள் பற்றிய கேள்விக்கு, அமைச்சர் பொன்முடி சரியான பதில் அளிக்காமல், கள்ளை போதைப் பொருள் என இழிவுபடுத்தியதாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பெண்கள் கள் அருந்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
