முதல்வர் கொடுத்த வாக்குறுதி..! களத்தில் இறங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

x
  • விருதுநகர் மாவட்டம், மறையூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த, பாரம்பரியமிக்க வழிப்போக்கர் அன்ன சத்திரத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வுசெய்த உடனே, சீரமைப்புப் பணிகள் தொடங்கி உள்ளன.
  • விருதுநகர் மாவட்டம், மறையூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த, பாரம்பரியமிக்க வழிப்போக்கர் அன்ன சத்திரத்தை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தொல்லியலுக்கும், பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிக முக்கியத்தும் கொடுத்து, அத்தகைய சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளாதாக கூறினார்.
  • பாரம்பரியமிக்க இந்த வழிப்போக்கர் அன்ன சத்திரத்தைம் சிறந்த முறையிலே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதைத் தொடர்ந்து சில மணி நேரத்தில் அன்னச்சத்திரத்தை சுற்றி இருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்