ரயில் என்ஜினில்ஏற முயன்ற விசிகவினர்- விழுப்புரத்தில் பரபரப்பு..
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அமித்ஷாவை கண்டித்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் விசிகவினர் சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், ரயில் எஞ்சின் மீது ஏற முயன்றதை போலீசார் தடுத்தால் காவல் துறையினருக்கும் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலின் போது அமித்ஷாவின் உருவ பேனரை விசிகவினர் கொளுத்த முயன்றபோது, அதனை போலீசார் தடுத்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட விசிகவினர் கைது செய்யப்பட்டனர்.
Next Story