விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் - பிரேமலதா எடுத்த முக்கிய முடிவு
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்திற்கு, திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சியினரையும் நேரில் அழைக்க உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேதமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நடித்த படங்களில் இருந்து 150 பாடல்களை 13 மணி நேரத்தில் பாடும் சாதனை நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகைகள் நளினி, வடிவுக்கரசி, நடிகர் கிங் காங் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பிரேமலதாவும் பாடல்கள் பாடினார்.
Next Story