பிப்.2-ல் காத்திருக்கும் மெகா சம்பவம் - மாற போகும் தலைப்பு செய்தி

x

வி.சி.க.வில் இருந்து நீக்கப்பட்ட வாய்ஸ் ஆப் காமன் நிறுவனர் ஆதவ் அர்ஜுனாவுக்கு, தமிழக வெற்றிக்கழகத்தில் முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க 2ம் ஆண்டு தொடக்க விழா பிப்ரவரி 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பனையூர் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொள்கைத் தலைவர்களின் ​சிலைகளை விஜய் திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் அறிமுக கூட்டம், அதன் பின்னர் கட்சியில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாற்றுக்கட்சியினர் இணைய விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், இணைப்பு விழா நடத்தவும் த.வெ.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்