விடுதலை 2 படத்திற்கு வந்த சோதனை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

x

காரைக்காலில் ஏ சான்றிதழ் பெற்ற விடுதலை2 படத்தை பார்க்க, சிறார்களுக்கு அனுமதித்த திரையரங்கம் மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு சிறுவர்கள் வெளியே செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஆதாரத்துடன், கருணாகரன் என்பவர், காரை காவலன் செயலி மூலம் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திரையரங்கு மீது புகார் அளித்துள்ள சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்