``சொன்னது Sun.. கட்சி தலைவரின் Son அல்ல..'' வெங்கையா நாயுடு பரபரப்பு பேச்சு
சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 20-வது ஆண்டு தொடக்கவிழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, இந்தியாவில் 2 சதவீத மக்களே ஆங்கிலத்தை புரிந்து கொள்வதாகவும், அனைவரும் இந்தி உட்பட மற்ற மொழிகளை படிக்க வேண்டும் என்றார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக கூறிய அவர், இந்தி எழுத்தின் மீது கருப்பு மை பூசி அழித்ததை, தன்னுடைய முகத்திலேயே பூசியது போல் கருதுவதாக பேசினார். மேலும் சூரிய உதயத்தின்போதே எழுந்திருக்க வேண்டும் என்று பேசிய வெங்கையா நாயுடு, தான் குறிப்பிட்டது வானத்தில் உதிக்கும் Sun என்றும், இங்குள்ள உள்ளூர் கட்சி தலைவரின் Son அல்ல என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மறைமுகமாக அரசியல் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.