"ஆட்சியில் அதிகாரம்..! எந்த தவறும் இல்லை..?" திருமாவுக்கு ஆதரவு அளித்த கார்த்தி சிதம்பரம் | VCK
சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம், வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். இந்த அச்சத்தை போக்க வேண்டியது காவல் துறை மற்றும் அரசின் கடமை என்றும் அவர் கூறினர். அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விசாரணை செய்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆட்சிக்கு வரவேண்டும், முதல்வராக வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் நினைப்பதில் தவறில்லை என்றும் கார்த்தி சிதம்பரம் அப்போது கூறினார்.
Next Story