"அவர்களின் வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது" - கொந்தளித்த வானதி ஸ்ரீனிவாசன் | Vanathi Srinivasan
வாக்கு வங்கி அரசியலுக்காக அடிப்படைவாதிகளின் வெறியாட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நெல்லை மேலப்பாளையத்தில் அமரன் படம் வெளியான திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யாத காவல்துறை,அதற்கு எதிராக வன்முறை கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.நெல்லையில்,பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்வதுடன், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, வானதிசீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Next Story