முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் - ஒத்தி வைக்கப்பட்ட UGC NET தேர்வு
UGC NET தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது சரியான முடிவு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...
UGC NET தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தத நிலையில் தற்போது அத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பண்பாட்டுத் திருநாள்களின் போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப் படுவதும் வாடிக்கையாகி விட்டதாக குற்றம் சாட்டிய அவர், இனியாவது அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகள் எடுக்கப்படும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story