மட்டன், சிக்கன் பிரியாணி - தடபுடல் விருந்து கொடுத்த உதயநிதி - ஒன்றுகூடிய திமுக முக்கிய புள்ளிகள்

x

2026 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தொகுதி பார்வையாளர்களை நியமிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைத்தவர்களை திமுக ஒருங்கிணைப்பு குழு பாராட்டியுள்ளது. ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்படுமாறு அறிவுரை வழங்கினர். மக்களவைத் தேர்தல் போன்றே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமிக்க திமுக ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. நிகழ்ச்சிக்குப் பிறகு, அனைத்து நிர்வாகிகளுக்கும், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி சிக்கன் 65, தோசை, பரோட்டா, ஸ்வீட்ஸ் போன்ற உணவுகள் விருந்தாக பரிமாறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்