#Justin|| ``சரியான பதிலடி கிடைக்கும்'' - விஜய்யை மறைமுகமாக தாக்கினாரா துணை முதல்வர் உதயநிதி

x

தஞ்சை தனியார் திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி வீட்டு கல்யாணத்தில் கலந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்.

நான் முதன்முதலாக துணை முதல்வராக இன்றைய தினம் தஞ்சை வந்தது எனக்கு பெருமையாக உள்ளது.

நான் துணை முதல் அமைச்சர் ஆகவேண்டும் என்கிற முதல் தீர்மானம் தஞ்சையில் இருந்து தான் வந்தது.

ஒருகாலத்தில் பெண்கள் வெளியில் வருவது இல்லை ஆனால் இன்று ஏராளமான பெண்கள் திருமண வீட்டிற்கு வந்துள்ளார்கள். இதற்கு காரணம் நம் திராவிடம் தான். பெண் அடிமைத்தனத்தை ஒழித்தவர் பெரியார். மகளிர் வளர்ச்சி தான் மாநில வளர்ச்சி என்பார் தலைவர் ஸ்டாலின். அதற்கு ஏற்றார் போலத்தான் மகளிர்க்கு பல திட்டத்தை கொண்டுவந்துள்ளார்.

திமுகவை அழிக்க வந்ததாக நிறையபேர் உள்ளார்கள் அவர்களுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

பல அணிகளாக உள்ளது அதிமுக. யாரும் சீண்டாத பாஜக வும் திமுக கூட்டணியில் பிளவு விழாதா என நினைக்கிறார்கள்.

ஆனால் நமது தலைவர் கூட்டணி விவகாரத்தில் தெளிவாக இருக்கிறார்.

கூட்டணி கட்சி தலைவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.

இன்னும் 1.5 ஆண்டில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. நமது இலக்கு 200 தொகுதி வரவேண்டும் என்பது. அதற்கு ஏற்றார் போல் அனைவரும் செயல்பட வெண்டும்.

தஞ்சை மாவட்ட செயலாளர் துரை சந்திர சேகர் தெருவித்த போது தஞ்சையில் தீர்மானம் நிறைவேற்றினால் அது நடந்துவிடும், தஞ்சையின் ராசி என்றார். அதே போல் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தீர்மானம் நிரைவேற்றுங்கள். தீர்மானம் நிறைவேற்றினால் பத்தாது தீர்மானமாக மனதில் ஏற்றி செயல்படுங்கள் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தஞ்சாவூரில் பேச்சு


Next Story

மேலும் செய்திகள்