"தேசிய கீதம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்தும்" - உதயநிதி ஸ்டாலின் | DMK

x

எங்களுக்கு தேசிய கீதம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும் முக்கியம் என்றும், அனைத்து அரசு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும், தேசிய கீதம் பாடுவோம் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர் பாலு, அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என கிராமிய கலைகள் நடைபெற்றன. தொடர்ந்து, புத்தரிசியில் பொங்கலிட்டு, மக்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு நலத்திட்டங்கள் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்