த.வெ.க மாநாட்டில் எவ்வளவு பேர்? மேடையில் கை கோர்க்க போவது யார்? இறுதி அஸ்திரம்...விஜய் எடுக்க போகும் முடிவு

x

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா?... காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதிலளித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை சமர்பித்திருக்கும் நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மிகப் பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டிருக்கிறார்...

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்... வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி கேட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்.பியிடம் மனு அளித்தார்..

மாநாட்டில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் ?, நிலத்தின் உரிமையாளர் யார்?, அவரிடம் அனுமதி கோரப்பட்டதா?, முறையான பார்க்கிங் வசதிகள் உள்ளதா? என சுமார் 21 கேள்விகளை எழுப்பி தவெக கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது....

இந்நிலையில், காவல்துறையின் 21 கேள்விகளுக்கான பதில் அடங்கிய அறிக்கையை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் டி.எஸ்.பியிடம் அளித்திருக்கிறார்...

அறிக்கையின் முதல் பக்கத்தில், மாநாட்டின் நேரம் குறித்தான கேள்விக்கு மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை என பதிலளிக்கப்பட்டிருக்கிறது...

தொடர்ந்து, மாநாட்டிற்குள் சிறுவர்கள் அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும், ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேருடன், 5 ஆயிரம் முதியவர்கள் மற்றும் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பார்கள் எனவும் தவெக தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது..

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாட்டிற்கு விரைவில் அனுமதி கிடைக்கும் எனக்கூறிய நிலையில், அனுமதி கிடைத்தவுடன் மாநாட்டிற்கான தேதியை தலைவர் விஜய் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்