தவெக கொடி விவகாரம்.. - நிர்வாகிகள் மீது பாய்ந்த அதிரடி வழக்கு..
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டி, அக்கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் திருத்தணி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில், 100 அடி நீளமுள்ள கட்சிக்கொடியுடன் அவர்கள் ஊர்வலம் வந்தனர். இதற்கு கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவே, கட்சி பேனருடன் அவர்கள் ஊர்வலத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து, கோயில் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Next Story