`விஜய் இல்லாமல்'.. முக்கிய மீட்டிங் - நிர்வாகிகளுக்கு பறந்த டாஸ்க் ... தேதி குறித்து... புஸ்ஸி ஆனந்த் அதிரடி

x

மாவட்ட தலைமை நிர்வாகிகளை அறிவித்த பின் ஒன்றியம், வட்டம், பகுதி என நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என, பொறுப்பாளர்களிடம் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் செயற்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளை நியமனம் செய்ய, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார். மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்படுவோர், தங்களுடைய மாவட்டத்தில், நிர்வாகிகளுடன் கலந்து பேசி, மாவட்ட அளவில் துணை செயலாளர்கள் இருவரையும், பொருளாளர் என ஒருவரையும் நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், ஒன்றியம், வட்டம், பகுதி என நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் எனவும், 20ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்