"முந்தா நாள் தொடங்கிய கட்சிக்கு பதில் சொல்ல முடியாது" -எம்.பி. டி.ஆர்.பாலு
100 நாள் வேலைத் திட்ட நிதி, 4 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை எனக் கூறி சென்னை குன்றத்தூரை அடுத்த பரணிபுத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டி.ஆர்.பாலு, 2014-ஆம் ஆண்டு முதல், மத்திய பாஜக அரசு, 100 நாள் வேலைத்திட்ட நிதியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது என்று கூறினார். தவெக தலைவர் விஜய் தெரிவித்த விமர்சனத்திற்கு, முந்தா நாள் தொடங்கிய கட்சிக்கு 64 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் தாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார்.
Next Story
