இன்றைய தலைப்பு செய்திகள் (17-08-2023)
இன்று ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்....
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்குகிறார்....
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு.....
33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்....
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
இரண்டாவது நாளாக பரிசல் இயக்க தடை...
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 3,260 கன அடியாக அதிகரிப்பு.....
டெல்டா பாசனத்திற்காக 6ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்.....
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிப்பு....
9 ஆயிரத்து 136 கன அடியில் இருந்து
13 ஆயிரத்து 473 கன அடியாக வெளியேற்றம்...
கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு....
மண்டியாவில் காவிரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.......
"தமிழகத்துக்கு நீர் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்
பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்....
கர்நாடக விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கருத்து....
நெய்வேலி என்எல்சி-க்கு வீடு, நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு.....
26ம் தேதி வரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு....
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திடீரென டிரான்ஸ்பார்மர் பற்றி எரிந்ததால் பரபரப்பு....
சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்பு...
விருத்தாசலம் அருகே கோயில் திருவிழாவில், இருகிராம மக்களிடையே மோதல்....
ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பும் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு....
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு....
முக்கிய சாட்சியான ஓய்வு பெற்ற தாசில்தார், பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபரப்பு....
அதிமுகவின் மதுரை மாநாடு நடைபெறும் நாளில், திமுக திட்டமிட்டே போராட்டத்தை அறிவித்திருக்கிறது....
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.....