இன்றைய தலைப்பு செய்திகள் (06-08-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
மாணவர்களுக்கு அறிவுரை
மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாகாமல் சவால்களை சமாளிக்கும் உறுதி பெற வேண்டும்...
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று அறிவுரை...
தமிழகத்திற்கு தனித்துவமான கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் தீவிரமாக செயலாற்றி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...2 நாள் பயணமாக புதுச்சேரி செல்லும் குடியரசு தலைவர்
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்
ராமச்சந்திரன், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்? அவரது புதுச்சேரி பயண திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை சொல்லுங்க...
வட இந்தியர்களுக்கு வேலை - என்.எல்.சி விளக்கம்
"ராஜஸ்தான் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்தவர்கள்"
28 வட இந்தியர்களுக்கு நிரந்தர வேலை வழங்கிய விவகாரம் குறித்து, என்.எல்.சி நிர்வாகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து என்.எல்.சி-க்கு நிலம் வழங்கி வேலைக்காக காத்திருப்பவர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம்... செய்தியாளர்கள் தேவநாதன், தேவகிருஷ்ணன் வழங்கிய தகவல்கள் இவை...
கை அகற்றப்பட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை விளக்கம்
கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தகவல்களை விவரிக்கிறார்கள் செய்தியாளர்கள் தாயுமானவன் மற்றும் சமயமணிவண்ணன்...