இருக்கும் பிடி... ஆளுநர் கையில் முடிவு... சிக்கலில் KTR... பரபரக்கும் அதிமுக...
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கை விரைந்தது விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய விசாரணை போது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வழக்காறிஞர் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக விசாரணை நடத்த ஆளுநரிடம் இசைவாணை கோரி கடிதம் எழுதப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் 4 வாரங்களுக்குள் வழங்குவார் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.
Next Story