`விஜய்க்கு பதிலடியா..?' பாய்ண்ட் பாய்ண்ட்டாக அமைச்சர் அதிரடி அறிக்கை | TN Politics

x

பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்

தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில் உற்பத்தித்துறையில் உள்ள பெண்களில் 43 சதவீதத்தினர்

தமிழ்நாட்டில் பணியாற்றுவதாக குறிபிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்,

43 குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

பெண்கள் உதவி மைய எண் 181 மற்றும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098 ஆகியவை மிகச் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடுமுழுமைக்கும் இலட்சத்துக்கு 65 என்றால்

தமிழ்நாட்டில் லட்சத்திற்கு 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக

குறிபிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்