``ஒன்னு அந்த ரகசியத்த சொல்லுங்க... இல்ல..'' - ஈபிஎஸ் அதிரடி பதிவு | EPS

x

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், நீட் தேர்வு அச்சத்தால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும், நீட் தேர்வு ரத்து ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி குழப்பத்திலேயே வைத்திருப்பதாகவும், விமர்சித்துள்ளார். அப்படி இல்லை என்றால், சொன்னது பொய்தான் என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமென்றும், எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்