``வறட்டு கவுரவம்... அமைச்சர் மீண்டும் பொய் சொல்கிறார்..'' - அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

x

பள்ளிக்கல்வித் துறை BSNL நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் பொய் சொல்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அப்படியென்றால் பள்ளிக்கல்வித்துறை தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறாரா? என கேள்வி எழுப்பியிருக்கும் அண்ணாமலை, விளம்பர மாடல் ஆட்சியில் எந்த துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை என விமர்சித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வறட்டு கௌரவத்தை காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவை தொகையை உடனடியாக செலுத்த வலியுறுத்துவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்