தமிழக பட்ஜெட்... நேரடியாக பெரிய திரையில் பார்த்த சென்னை மக்கள் சொன்ன கருத்து
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை பொதுமக்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் சுமார் 1000 இடங்களிலும் சென்னையில் 100 இடங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், ரிப்பன் மாளிகை பாண்டி பஜார், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாற்காலிகள் போடப்பட்டு பந்தல் அமைக்கப்பட்டு பெரிய திரையில் நிதி அமைச்சர், பட்ஜெட் தாக்கல் செய்தது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுகுறித்து மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Next Story