ஈபிஎஸ் எழுப்பிய கேள்வி - நேருக்கு நேர் எழுந்து முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்...

x

ஈபிஎஸ் எழுப்பிய கேள்வி - நேருக்கு நேர் எழுந்து முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்... பரபரப்பான பேரவை

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி - காரசார விவாதம்

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி முதல் காரசார விவாதம் வரை

கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த அதிமுக

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அவையை வழி நடத்திய துணை சபாநாயகர் பிச்சாண்டி

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வியடைந்தது

டிவிஷன் என்று சொல்லக்கூடிய “எண்ணி கணிக்கும்“ முறையில் வாக்கெடுப்பு நடத்த அதிமுக கோரிக்கை

டிவிஷன் வாக்கெடுப்பு முறையில் அதிமுக தீர்மானத்திற்கு ஆதரவாக 63 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவானது

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்

தீர்மானம் தோல்வி அடைந்ததால் மீண்டும் சபாநாயகர் அப்பாவு அவையை வழி நடத்தினார்

அதிமுக எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்

தேர்தல் வாக்குறுதியில் 95 சதவீதத்தை நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சாட்டினார்....

கே.பி.முனுசாமி சபாநாயகரை ஒருமையில் பேசியதாக திமுக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர்

அவை முன்னவர் துரைமுருகன் கே.பி முனுசாமி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக அவையில் எழுப்பப்பட்ட கேள்வி

அதிமுக ஆட்சியிலேயே மடிக்கணினி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்

நாளைய தினமும் பட்ஜெட் மீதான விவாதம் பேரவையில் நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்