"திருமூலருக்கு தமிழ் இருக்கை" "முதலமைச்சர்உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்" - Dr.விஜய் ஜானகிராமன்
திருமூலருக்கு தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும், மருத்துவர் விஜய் ஜானகி ராமன் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பிறந்து, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று, அமெரிக்காவில் இருதயவியல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மருத்துவர் விஜய் ஜானகிராமன். இவர் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமூலர் தமிழ் இருக்கை அமைக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உதவி செய்வதாக தெரிவித்துள்ளதாக விஜய் ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.
Next Story