தென்னகமே பரபரக்கும் விவகாரம் - ``உத்தரவாதம் தாருங்கள்'' - MP திருச்சி சிவா அதிரடி
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படாது என பா.ஜ.க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் தொகை அடிப்படையில் 2026ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தமிழகத்தின் எம்.பி தொகுதி 31ஆக குறையும் என்றார். மேலும், நாடாளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்காது எனவும் திருச்சி சிவார கருத்து கூறினார்.
Next Story