"இது மட்டும் பிரச்சனை இல்லை"..ஆவேசமாக பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
தென்தமிழகம் சாதிய பிரச்சனைகளால் பாதித்துள்ளது கவலை அளிப்பதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வை மட்டும் பெரிதாக பேசி வருவதாகத் தெரிவித்தார். நட்பு ரீதியாக உள்ள கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் வாங்க முடியாமல் இருக்கும்போது, ஏன் அந்த கூட்டணி என்றும் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
Next Story