"ஒரே மேடையில் நானும் விஜய்யும்... இது நடந்தால்" - திருமா கொடுத்த மெசேஜ்... ஆதவ்-க்கு பேரிடியை இறக்கிய விசிக -பற்றி எரியும் தமிழக அரசியல்

x

திருமாவளவனுக்கு கூட்டணி சார்ந்து நெருக்கடி இருப்பதை யூகிக்க முடிவதாக தவெக தலைவர் விஜய் கூறிய கருத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்த ரியாக்சன் என்ன என்பதை பார்க்கலாம்.. விரிவாக..

"எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பேசிய விஜய், திருமாவளவன் குறித்து கொஞ்சமாக பேசியிருந்தாலும், தமிழ்நாட்டின் அரசியல் சூழலில், நெருப்பை கொளுத்திப் போட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அம்பேத்கரை எல்லோருக்குமான தலைவர் என விஜய் சுட்டிக் காட்டியது பெருமை அளிப்பதாக கூறிய திருமாவளவன், கூட்டணி கட்சி சார்ந்து அழுத்தம் இருப்பதாக கூறிய விஜயின் கருத்துக்கு.. அரசியல் தெளிவுடன் பதில் அளித்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

விஜய் பங்கேற்ற அம்பேத்கர் குறித்த நூல் வெளியாட்டு விழாவில், திமுக கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் அழுத்தம் தந்திருப்பதாக விழா மேடையில் பேசிய விஜய்யின் கருத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவனின் பதிலைக் காணலாம்.

தவெக தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில், புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்று இருந்தால், தமிழ்நாடு அரசியல் களத்தில் என்ன எல்லாம் நடந்திருக்கலாம் என்பதையும் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கியுள்ளார்.

திருமாவளவன் வராவிட்டாலும் அவரது நினைவுகள் அனைத்தும் இங்கேயே இருப்பதாக குறிப்பிட்டு பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்தை தொடர்ந்து, கட்சியின் உயர்நிலைக்குழு விசாரணை மேற்கொண்டு அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இப்படி விசிகவோ, திருமாவளவனோ பிற கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தினால், தேங்கி நிற்பதாக இல்லை என உறுதியுடன் கூறிய திருமாவளவன், கலைஞர் படம் பொறித்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கும், முதலமைச்சரும் ஒரே மேடையில் வெளியிட்டபோது, திமுக - பாஜக கூட்டணி சேர போகிறது என்று யாரும் ஏன் யாரும் தலைப்பு செய்தி போடவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல, தமிழ்நாட்டில் எளியவர்களுக்கும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதற்கான சூழல் எப்படி உள்ளது என்பதையும் திருமாவளவன் விளக்கியுள்ளார்.

2026 தேர்தலை குறித்து அரசியல் களம் நகர்ந்து வரும் சூழலில், விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் தோன்றாமாலே, பம்பரம் போல தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போதே சுழலத் தொடங்கி விட்டது என்றே சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்