தமிழர்களின் வரலாற்று சின்னங்களை அழிக்க மத்திய அரசு முயற்சி - திருமாவளவன் பரபரப்பு பேச்சு
டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூரில், பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மாநில அரசு முல்லை பெரியாறு ஒருபோக பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய திருமாவளவன், தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களை அழிக்க மத்திய அரசு முனைவதாக குற்றம் சாட்டினார். அனைத்துக்கட்சிகளும் எதிர்ப்பதால், இந்த திட்டம் வராது என்றும் அவர் கூறினார்.
Next Story