சீமான் குறித்து திருமா எழுப்பிய திடீர் சந்தேகம்
தமிழ்நாட்டில் பொருத்தம் இல்லாத அரசியலை சீமான் பேசிக்கொண்டிருப்பதாக, விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது புரியவில்லை என கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளை பெற இந்த யுக்தியை கையாளுகிறாரா? என்று ஐயம் எழுவதாக குறிப்பிட்டுள்ள திருமாவளவன், சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? என்கிற கேள்வி எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story