"நீட் விலக்கு மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும்" - உறுதி கொடுத்த முதல்வர்
நீட் விலக்கு என்கிற நமது இலக்கு, மக்களின் பேராதரவுடன் நிறைவேறியே தீரும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-ஆவது மாநாடு, 20-ஆம் ஆண்டு தொடக்க விழா, மற்றும் TNMSA - TNDSA கருத்தரங்கில் காணொலி வாயிலாக முதலமைச்சர் வாழ்த்துரை வழங்கினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தை உறுதியோடு முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
Next Story