பதற்றத்தை கிளப்பிய கொடிக்கம்பம்..வேண்டாம்-னு சொன்ன இஸ்லாமியர்கள்..அண்ணாமலை வீட்டின் முன்பு பரபரப்பு
சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே, பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி இஸ்லாமியர்களும், அகற்ற மாட்டோம் என பாஜகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இஸ்லாமியர்கள் பாஜகவினர் உள்ள பகுதிக்கு வராமல் இருக்க, போலீசார் தடுப்புகள் வைத்தபோது, போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story