முப்படை ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் அடையாள சான்றிதழ் காணவும், அவர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும் 50 ஆவது பொன்விழா முகாம் வேலூரில் நடைபெற்றது. சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் சார்பில் நடத்தப்பட்ட முகாமில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துக்கொண்டார். முகாமில் முன்னாள் ராணுவ வீரர்கள் 10 பேரது குடும்பத்திற்கு உதவித்தொகையை வழங்கிய ஆளுநர், சக்கரா விருது பெற்ற 10 வீரர்களின் குடும்பத்தினரை கௌரவித்தார். விழாவில் பேசிய அவர், வேலூரில்தான் முதன் முதலில் இந்திய விடுதலைக்கான ஒலி எழுந்தது என்றும் இது ஒரு வீரம்மிக்க புண்ணிய பூமி என்றும் நெகிழ்ந்தார். மோடி அரசே வீரர்களுக்கு ஒய்வூதியம் பெறுவதில் இருந்த பல சிக்கல்களுக்கு தீர்வு காண்பதாகவும் தெரிவித்தார்.
Next Story