முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய முக்கிய கடிதம்

x

முதலமைச்சருக்கு ராமதாஸ் எழுதிய முக்கிய கடிதம். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் தாமதமாகி வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டுவதற்காக தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க சட்டமோ , விதிகளோ தடையாக இல்லை என்றும் ஆட்சியாளர்களின் மனத்தடை மட்டும் தான் பெரும் தடையாக இருக்கிறது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அறிவிப்பை வரும் 29 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் மணிமண்டப திறப்பு விழாவில் தாங்கள் வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்