"2047க்குள் வளர்ந்த இந்தியா என்பதே தேசிய இலக்கு"..குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேண்டுகோள்

x

75வது அரசியல் சாசன தினம், பழைய நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. அரசியல் சாசன நாள் தபால் தலை, சிறப்பு நாணயத்தை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டார். இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையை குடியரசுத் தலைவர் வாசிக்க அதனை பிரதமர் மோடி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருப்பி கூறினார்கள். பின்னர், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் 15 பெண் உறுப்பினர்கள் முக்கிய பங்காற்றியதை நினைகூர்ந்து பேசிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மகளிர் இடஒதுக்கீடு சட்டம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் புதிக சகாப்தத்தை தொடங்கி இருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய அனைவரும் உழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்