முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த நாகூர் ஹனிபா குடும்பத்தினர் - காரணம் இதுதான்!

x

நாகூர் ஹனிபா பெயரை தெருவிற்கு சூட்டியதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் நாகூர் ஹனிபாவின் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு "இசை முரசு நாகூர் ஹனிபா" முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

அதேபோல், சில்லடி கடற்கரைக்கு செல்லும் சாலையில் புதுப்பிக்கப்படும் பூங்காவிற்கும், “இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா என்றும் பெயர் சூட்டினார். இதற்காக தலைமைச்செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஹனிபா குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்