"திமுக அரசு பதட்டத்தில் உள்ளது" - அமைச்சர் எல்.முருகன்

x

பத்திரிகைகள், ஊடகங்கள் என்ன செய்தியை வெளியிட வேண்டும் என்பதை திமுக அரசு முடிவு செய்யும் அளவுக்கு நிலைமை கைமீறி போய் விட்டதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டசபை நிகழ்வுகளை ஒலிபரப்புவது, செய்தியாக வெளியிடுவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக குறிபிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாமே திமுக அரசு பதட்டத்தில் இருப்பதையே உணர்த்துவதாக கூறியுள்ளார். சபாநாயகர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்