வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி - அரசியல் கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர்கள் தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், திமுக சார்பில் வழக்கறிஞர் மருது கணேஷ், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான குமரகுருபரன் தொடர்ந்து வாக்களார் சரிபார்ப்பு பட்டியல் கூட்டத்தை புறகணித்து வருவதாக பாஜக குற்றச்சாட்டியது. அப்போது, இறந்தவர்களின் பெயர்களில் தனது தாயார் பெயரை கூட நீக்கவில்லை என திமுக வழக்கிறஞர் மருது கணேஷ் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினரும் வாக்குச்சாவடி அலுவலர்களாக திறமையானவர்களை நியமிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வட்டார ஆணையர்களை வாக்காளர்கள் பட்டியல் பார்வையாளர் அனில் மேஸ்ரம் வலியுறுத்தினார்.